தமிழ்நாடு செய்திகள்
ஈரோட்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட தினேஷ் குண்டுராவிடம் சஞ்சய் சம்பத் விருப்ப மனு
- காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சத்தியமூர்த்தி பவனில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத்திடமும் நேரில் அழைத்து கருத்து கேட்டார்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை காங்கிரசார் வற்புறுத்தி வந்த நிலையில் அவர் போட்டியிடவில்லை என்று அறிவித்து விட்டார்.
அதற்கு பதில் தனது மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு வழங்கும்படி கேட்டுள்ளார். இந்த நிலையில் இன்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சத்தியமூர்த்தி பவனில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத்திடம் நேரில் கருத்து கேட்டார். அவருடன் இளங்கோவன், விஷ்ணு பிரசாத் எம்.பி., ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜனும் கலந்து கொண்டார்.
பின்னர் சஞ்சய் சம்பத் ஈரோடு தொகுதியில் போட்டியிட தினேஷ் குண்டுராவிடம் விருப்ப மனு கொடுத்தார்.