தமிழ்நாடு செய்திகள்

ஈரோட்டில் கடன் தொல்லை காரணமாக ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

Published On 2023-08-14 13:45 IST   |   Update On 2023-08-14 13:45:00 IST
  • ஏ.டி.எம். மையத்தில் உள்ள ஒயரை பெண் ஒருவர் அறுத்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
  • ஏ.டி.எம்.மில் பெண் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கனி ராவுத்தர் குளம் அடுத்த ஈ.பி. நகரில் தனியார் வங்கி சார்பில் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஏ.டி.எம். எந்திரத்தின் ஒயர்களை பெண் ஒருவர் அறுத்து கொண்டிருப்பதாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது ஏ.டி.எம். மையத்தில் உள்ள ஒயரை பெண் ஒருவர் அறுத்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசார் உடனே அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த பெண் நசிமாபானு என்பதும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தனது மகனுடன் வசித்து வருவதும் தெரியவந்தது.

மேலும் தறிப்பட்டறை தொழிலாளியான இவர் பல்வேறு இடங்களில் கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்து ள்ளார்.

இந்நிலையில் தான் ஈரோட்டில் உள்ள தனியார் ஏ.டி.எம்-ஐ உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து நசிமாபானுவை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் அவரிடம் இருந்து ஒயர் கட்டர் மற்றும் சுத்தியலை போலீசார் பறிமுதல் செய்தனர். ஏ.டி.எம்.மில் பெண் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News