தமிழ்நாடு செய்திகள்
ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தொடக்கம்
- கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
- கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர் எண்ணிக்கை, பதற்றமான வாக்கு சாவடிகள் போன்ற விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் பணிகளை மேற்கொள்ளவதற்காக ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தேர்தல் பிரிவுக்கென தனி அலுவலகம் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த தேர்தல் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி தலைமையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசாருடன் செயல்பட தொடங்கி உள்ளது. தற்போது கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர் எண்ணிக்கை, பதற்றமான வாக்கு சாவடிகள் போன்ற விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.