தமிழ்நாடு செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

Published On 2022-12-13 12:42 IST   |   Update On 2022-12-13 12:42:00 IST
  • ஆளுநர் மாளிகையில் நாளை அமைச்சராக பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
  • உதயநிதி ஸ்டாலினுக்காக கோட்டையில் தனி அறை ஒன்று தயாராகி வருவதாக தகவல் வெளியானது.

தி.மு.க. இளைஞரணி செயலாளராக 2-வது முறையாக உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். அப்போதே விரைவில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவியேற்க உள்ளார்.

வரும் 14ம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினுக்காக கோட்டையில் தனி அறை ஒன்று தயாராகி வருவதாகவும், இன்று இரவுக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News