தமிழ்நாடு செய்திகள்
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் டிரோன் விரட்டியடிப்பு
- குர்தாஸ்பூர் என்ற இடத்தில் பாகிஸ்தான் டிரோன் நுழைய முயன்றது.
- பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் அந்த டிரோனை விரட்டியடித்தனர்.
இந்திய எல்லைக்குள் அவ்வப்போது ஊடுருவும் டிரோன்களை இந்திய படையினர் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பஞ்சாப் மாநில எல்லைப்பகுதியான குர்தாஸ்பூர் என்ற இடத்தில் பாகிஸ்தான் டிரோன் நுழைய முயன்றது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் அந்த டிரோனை விரட்டியடித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து குர்தாஸ்பூரில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது.