தமிழ்நாடு செய்திகள்

அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் முறித்துக்கொண்டாலும் திமுக தான் வெற்றிபெறும்- உதயநிதி ஸ்டாலின்

Published On 2023-09-26 03:45 IST   |   Update On 2023-09-26 03:45:00 IST
  • பொய்யாக கூட்டணி இல்லை என்பார்கள்.
  • அதிமுகவின் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது.

சென்னை:

அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து பல்வேறு கட்சித்தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது:-

அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துக்கொண்டாலும், முறித்துக்கொண்டாலும் திமுக தான் வெற்றிபெறும். அதிமுகவின் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது.

தற்போது பொய்யாக கூட்டணி இல்லை என்பார்கள். ஆனால் தேர்தல் நேரத்தில் கூட்டணி வைத்துக்கொள்வார்கள்."

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News