தமிழ்நாடு

சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா தொற்று உயருகிறது

Published On 2023-04-11 05:03 GMT   |   Update On 2023-04-11 05:03 GMT
  • பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது 5 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
  • மாநகராட்சி ஊழியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

சென்னை:

சென்னையில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. ஒமைக்ரானின் உருமாறிய எக்ஸ்.பி.பி., பி.ஏ.2 வகை தொற்றுதான் அதிக அளவில் பரவி வருகிறது.

இந்த வகை வைரஸ் வீரியம் குறைவாக இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதே நேரம் டெங்கு, நிமோனியா காய்ச்சல் போன்ற நோய்களும் ஏற்படுவதால் தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலை உள்ளது.

அதே போல் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று அச்சுறுத்தலாக இருக்கும்.

சென்னையில் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாக 5 மண்டலங்களில் அதிகமாக பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி அண்ணாநகர்-10, தேனாம்பேட்டை-14, கோடம்பாக்கம்-13, அடையாறு-18, பெருங்குடி-10 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது 5 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். மாநகராட்சி ஊழியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

வீட்டு தனிமையில் இருப்பவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அந்த பகுதியில் இருப்பவர்களையும் நடமாடுபவர்களையும் கட்டாயம் முக கவசம் அணியும்படி அறிவுறுத்தி வருகிறார்கள்.

தற்போதைய நிலையில் மக்கள் அடர்த்தியான பகுதிகளில்தான் தொற்று அதிகரித்துள்ளது. இந்த பகுதிகளில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

Tags:    

Similar News