தமிழ்நாடு செய்திகள்
சுற்றுலா வாகனம் மோதி கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து
- கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற காரின் முன்பகுதி சேதமடைந்தது.
- விபத்து நடந்த பகுதிக்கு அருகில் மெரினா காவல் நிலையம் இருந்தும் போக்குவரத்து போலீசர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என புகார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் திடீரென விபத்தில் சிக்கியது.
பட்டினப்பாக்கம் சாலையில் சுற்றுலா வாகனம் ஒன்று கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ராதாகிருஷ்ணன் சென்ற காரின் முன்பகுதி சேதமடைந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்த ராதாகிருஷ்ணன் காயங்கள் எதுவுமின்றி தப்பினார்.
விபத்து நடந்த பகுதிக்கு அருகில் மெரினா காவல் நிலையம் இருந்தும் போக்குவரத்து போலீசர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை ராதாகிருஷ்ணன் தாமாக முன்வந்து சரிசெய்தார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.