தமிழ்நாடு செய்திகள்

90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார்- அமைச்சர் அன்பரசன் பேட்டி

Published On 2023-02-05 10:37 IST   |   Update On 2023-02-05 10:37:00 IST
  • நாங்கள் வாக்கு கேட்டு செல்லும்போது பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.
  • ஈரோடு மாவட்ட வளர்ச்சிக்காக ரூ. 320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோட்டில் இன்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

நாங்கள் வாக்கு கேட்டு செல்லும்போது பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. பொதுமக்களிடம் பெரிய எழுச்சியை காண முடிகிறது. முதலமைச்சர் கடந்த 1½ ஆண்டு காலத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். ஈரோடு மாவட்ட வளர்ச்சிக்காக ரூ. 320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு 6 மாதத்திற்குள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.

திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.ஆகி ஒன்றை ஆண்டு காலத்திலேயே இறந்து விட்டார். அவருக்கு பதிலாக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News