சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் குழந்தை திருமண புகைப்படம்
சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகள் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்
- சிதம்பரத்தில் தீட்சிதர்களின் குழந்தைகள் திருமண புகைப்படம் சமூக வலலைதளங்களில் பரவி வருகிறது.
- கடந்த 2 நாட்களுக்கு முன் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், சிதம்பரம் வந்து விசாரணை மேற்கொண்டார்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்று வருவதாக புகார் வந்தது.
இதனை தொடர்ந்து குழந்தை திருமணங்கள் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், சிதம்பரம் வந்து விசாரணை மேற்கொண்டார்.
முதலில் நடராஜர் கோவிலுக்கு சென்று அங்கு தீட்சிதர்களிடம் குழந்தைகள் திருமணம் பற்றி விசாரணை செய்தார்.
பின்னர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சென்று இந்த வழக்கு சம்மந்தமாக அறிக்கை கேட்டார். குழந்தைகள் திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் வீடுகளுக்கும் சென்று விசாரைண மேற்கொண்டார்.
இந்த நிலையில் தீட்சிதர் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.