தமிழ்நாடு

கருணாநிதி பிறந்த நாளையொட்டி சென்னையில் 3-ந்தேதி மலர் கண்காட்சி

Published On 2023-05-31 11:24 GMT   |   Update On 2023-05-31 11:24 GMT
  • நுழைவு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஜூன் 3-ந்தேதி சென்னையில் இரண்டாவது முறையாக மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. ஜூன் 3-ந் தேதி தொடங்கி 5-ந் தேதி வரை 3 நாட்கள் செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

பெங்களூரு, ஊட்டி, ஓசூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 200- க்கும் அதிக வகையிலான மலர்களால் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மலர் கண்காட்சிக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

நுழைவு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட மயில், குதிரை, சிங்கம், கரடி போன்ற சிற்பங்கள், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை விளக்கக்கூடிய வகையில் மலர் அலங்காரங்கள், இரண்டு சாதனைகளை விளக்கும் வகையில் அலங்காரங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News