செங்கல்பட்டில் நெல் கொள்முதல் நிலைய விதிமீறல்- புகாருக்கு கட்டுப்பாட்டு அறை
- நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளின் நலன் கருதி முன்கூட்டியே, அதாவது கடந்த 1-ந்தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
- விவசாயிகள் பயன்படுத்தி நெல் விற்பனை செய்யலாம்.
செங்கல்பட்டில் நெல் கொள்முதல் நிலையத்தில் விதிமீறல் தொடர்பான புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி திறக்கப்பட இருந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளின் நலன் கருதி முன்கூட்டியே, அதாவது கடந்த 1-ந்தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பாண்டு 2022-2023-ல் சொர்ணவாரி கொள்முதல் பருவத்தில் தற்போது 14 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனை விவசாயிகள் பயன்படுத்தி நெல் விற்பனை செய்யலாம்.
நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் தொடர்பாக ஏதேனும் குறைபாடோ, புகாரோ இருந்தால் நுகர்பொருள் வாணிப கழக தலைமை அலுவலக இலவச தொலைபேசி எண் 18005993540-ல் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் நெல் கொள்முதல் நிலையத்தில் விதி மீறல் தொடர்பாக புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-26421663, 044-26421665 ஆகியவற்றிலும், மாவட்ட கலெக்டர், செங்கல்பட்டு கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-27427412, 044-27427414 ஆகியவற்றிலும், கட்டுப்பாட்டு அறை வாட்ஸ் அப் எண்:9444272345 என்ற எண்ணிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை புகார் தெரிவிக்கலாம்.
விவசாயிகள் தெரிவிக்கும் புகார்கள், கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.