தமிழ்நாடு செய்திகள்

வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் உயர்வு: தமிழக அரசுக்கு மத்திய மந்திரி பாராட்டு

Published On 2023-05-16 12:33 IST   |   Update On 2023-05-16 12:33:00 IST
  • 2021-2022-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில், மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட ஏதுவாக, 24 மணி நேரமும் மின் விநியோகத்தினை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உதவிடும்.

சென்னை:

தமிழ்நாட்டில், ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம், தேசிய சராசரி அளவைவிட கூடுதலாக வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய எரிசக்தித் துறை மந்திரி ஆர்.கே. சிங் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய அளவில் 2018-2019-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் 70 நிமிடங்களாக வழங்கப்பட்டு வந்த நிலையில், 2021-2022-ம் ஆண்டில், அது நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் 53 நிமிடங்களாக இருப்பதாகவும், இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2018-2019-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் 77 நிமிடங்களாக ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் விநியோகம், 2021-2022-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி, தனது பாராட்டினைத் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில், மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட ஏதுவாக, 24 மணி நேரமும் மின் விநியோகத்தினை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உதவிடும்.

இவ்வாறு மத்திய எரிசக்தித்துறை மந்திரி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News