தமிழ்நாடு செய்திகள்

அந்தியூர் பகுதியில் பலத்த மழையால் ரோட்டில் முறிந்து விழுந்த வேப்ப மரம்- போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-09-19 11:45 IST   |   Update On 2023-09-19 12:11:00 IST
  • ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.
  • மழை நின்ற பிறகு அந்த மரத்தின் கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டததில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் சாரல் மலை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்த நிலையில் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் அடித்து வந்தது. இதை தொடர்ந்து மதியம் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இதையடுத்து சிறிது நேரத்தில் லேசாக சாரல் மழை பெய்தது. இதை தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இதில் அந்தியூர்- அத்தாணி சாலையில் கெட்டி விநாயகர் கோவில் அருகே ரோட்டோரமாக இருந்த வேப்ப மரம் பலத்த காற்றால் முறிந்து ரோட்டில் விழுந்தது.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகள் அதிகளவில் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதனால் அந்தியூர்- அத்தாணி ரோட்டில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து அத்தாணி செல்லக்கூடிய பஸ்கள், அத்தாணியில் இருந்து அந்தியூர் பஸ் நிலையத்திற்கு வரக்கூடிய பஸ்கள், இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவித்தனர். சுமார்1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மழை நின்ற பிறகு அந்த மரத்தின் கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

Tags:    

Similar News