தமிழ்நாடு

இப்போது எந்த கூட்டணியிலும் பாட்டாளி மக்கள் கட்சி இல்லை- அன்புமணி 'திடீர்' அறிவிப்பு

Published On 2022-11-28 06:38 GMT   |   Update On 2022-11-28 06:38 GMT
  • எங்களுடைய நோக்கம் 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பது தான்.
  • அதற்கு ஏற்ப யுக்திகளையும், வியூகங்களையும் 2024 பாராளுமன்ற தேர்தலின்போது எடுப்போம் என அன்புமணி கூறினார்.

சென்னை:

தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க.வும் இடம் பெற்று இருந்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிட்டது.

இந்த நிலையில் மயிலாடுதுறையில் பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது பா.ம.க. எந்த கூட்டணியிலும் இல்லை. கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் தனித்துதான் போட்டியிட்டோம். கூட்டணி பற்றி பாராளுமன்ற தேர்தலின்போது முடிவெடுக்கப்படும்.

எங்களுடைய நோக்கம் 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பது தான். அதற்கு ஏற்ப யுக்திகளையும், வியூகங்களையும் 2024 பாராளுமன்ற தேர்தலின்போது எடுப்போம் என்றார்.

அன்புமணி தலைவராக பொறுப்பேற்றதும் பாட்டாளி நல கூட்டணி என கூறிவந்தார். அனைத்து கட்சிகளுடனும் இணைந்து கூட்டணி ஆட்சி முறை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதன் மூலம் தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு மாற்றாக ஒரு புதிய கூட்டணியை அமைக்க பா.ம.க. முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News