தமிழ்நாடு

கரையோர மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை... பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏற்பாடு

Published On 2023-11-29 07:06 GMT   |   Update On 2023-11-29 07:08 GMT
  • செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
  • கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சென்னை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் வடகிழக்கும் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக ஏரியில் இருந்து குடிநீர் மற்றம் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இன்று காலை 9 மணியில் இருந்து 1000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் இருந்து 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படும் நிலையில், அடையாறு கரையோர பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் குறுஞ்செய்தியின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News