தமிழ்நாடு

கோப்புபடம்.

850 மதுபான பார்கள் திறக்க அனுமதி: டெண்டர் அடிப்படையில் வழங்கப்படுகிறது

Published On 2023-12-11 10:45 GMT   |   Update On 2023-12-11 10:45 GMT
  • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு பல்வேறு பிரச்சனைகளுக்கும் வழி வகுக்கிறது.
  • பார்கள் இல்லாத 850 கடைகளுக்கும் பார்கள் நடத்த அனுமதி அளிக்க மதுபான கழகம் முடிவு செய்தது.

சென்னை:

சென்னை மற்றும் புறநகர்களில சுமார் 900 மதுபான கடைகள் உள்ளன. இதில் 850 மதுபான கடைகளின் உரிமம் 16 மாதங்களுக்கு முன்பு முடிந்துவிட்டது. அதன் பிறகு பார் நடத்த அனுமதி வழங்கவில்லை.

ஆனாலும் பல கடைகளில் சட்ட விரோதமாக ரகசியமாக பார்கள் செயல்படத்தான் செய்கின்றன. மிகவும் கெடுபிடியான இடங்களில் குடிமகன்கள் மதுபானங்களை வாங்கி ரோட்டோரங்களிலும், தெருக்களிலும் வைத்து குடிக்கிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு பல்வேறு பிரச்சனைகளுக்கும் வழி வகுக்கிறது.

இதனால் பார்கள் இல்லாத 850 கடைகளுக்கும் பார்கள் நடத்த அனுமதி அளிக்க மதுபான கழகம் முடிவு செய்தது. இதையடுத்து பார் உரிமம் கோருவதற்கான டெண்டர் கோரப்பட்டிருந்தது. டெண்டர்கள் அனைத்தும் இன்று திறக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்கள் நடத்த தேர்வு செய்யப்பட்டவர்கள் பற்றி நாளை ஆணையிடப்படும்.

அதன் பிறகு உரிமம் பெற்றவர்கள் பார் நடத்தப்போகும் கட்டிட உரிமையாளரின் ஒப்புதல் ஆவணத்துடன் மதுபான கழகத்தில் அனுமதி பெற்றதும் பார் நடத்த அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடைமுறைகள் அடுத்த ஒரு வாரத்துக்குள் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

புறநகர்களிலும் சேர்த்து 1200 மதுபான கடைகள் உள்ளன. எனவே, மீதமுள்ள சுமார் 350 பார்களுக்கு இந்த மாதத்துடன் உரிமம் முடிகிறது. அதன் பிறகு அந்த பார்களுக்கு டெண்டர் விடப்படும்.

Tags:    

Similar News