தமிழ்நாடு
கொள்ளை நடந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

நெல்லை அருகே கப்பல் ஊழியர் வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை

Published On 2022-09-30 04:43 GMT   |   Update On 2022-09-30 04:43 GMT
  • ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
  • தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து சிறிது தூரம் சென்று நின்றது.

பணகுடி:

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள மாறான்குளத்தை சேர்ந்தவர் சவுந்தரபாண்டி (வயது64). ஓய்வு பெற்ற கப்பல் ஊழியர்.

இவர் மருத்துவ சிகிச்சைக்காக தனது மனைவியுடன் கடந்த 27-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு கர்நாடகா மாநிலம் பெங்களூர் சென்றார்.

இந்நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பழவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 45 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 17 லட்சம் ஆகும்.

ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து சிறிது தூரம் சென்று நின்றது.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் சேகரித்து அதன்மூலம் மர்மநபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Tags:    

Similar News