தமிழ்நாடு

தமிழக வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையராக சுனில் மாத்தூர் பொறுப்பேற்பு

Published On 2023-08-18 03:17 GMT   |   Update On 2023-08-18 03:17 GMT
  • குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வருமான வரித்துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
  • மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

சென்னை:

தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையராக சுனில் மாத்தூர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர், 1988-ம் ஆண்டு இந்திய வருவாய் பணியில் (ஐ.ஆர்.எஸ்.) சேர்ந்தார். குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வருமான வரித்துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறையில் சென்னை புலனாய்வு பிரிவின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்ட இவர், தற்போது பதவி உயர்வு பெற்று முதன்மை தலைமை ஆணையர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு உள்ளார்.

Tags:    

Similar News