தமிழ்நாடு

தக்கலையில் இன்று அரசு பள்ளி முன்பு மாணவர்கள் போராட்டம்

Published On 2022-12-01 07:31 GMT   |   Update On 2022-12-01 07:31 GMT
  • பள்ளியில் சுமார் 96 மாணவ-மாணவிகள் படித்து கொண்டிருக்கின்றனர்.
  • சரியான கழிப்பிட வசதி இல்லை. மாணவர்கள் வெயிலிலும், மழையிலும் சிரமப்பட்டு வந்தனர்.

தக்கலை:

தக்கலை அருகே பத்மனாபபுரம் கோட்டையை ஒட்டி கல்குளம் அரசு தொடக்க பள்ளி சுமார் 70 ஆண்டாக செயல்பட்டு வந்தது. தமிழக அரசு பழைய பள்ளி கட்டிடம் இருந்தால் அகற்ற ஆணை பிறப்பித்து புதிய கட்டிடம் கட்ட திட்ட பணிகள் தயாரிக்கபட்டு கடந்த மார்ச் மாதம் கட்டிடம் இடிக்கப்பட்டது.

இந்த பள்ளியில் சுமார் 96 மாணவ-மாணவிகள் படித்து கொண்டிருக்கின்றனர். பழைய கட்டிடம் இடிக்கப்பட்டதால் அருகில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் அமைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வந்தனர்.

ஆனால் சரியான கழிப்பிட வசதி இல்லை. மாணவர்கள் வெயிலிலும், மழையிலும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து அடிப்படை வசதிகள் கேட்டு திடீரென பள்ளி முன்பு முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். சம்பவம் அறிந்து தக்கலை போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News