தமிழ்நாடு செய்திகள்

உயிரிழந்த வரிக்கழுதைப் புலியை படத்தில் காணலாம் (பழைய படம்)

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரிக்கழுதைப்புலி உயிரிழந்தது

Published On 2022-07-28 09:01 IST   |   Update On 2022-07-28 09:01:00 IST
  • 19 வயதான வெங்கட் என்ற ஆண் வரிக்கழுதைப்புலி, கடந்த 2 மாத காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது.
  • கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சிங்கங்கள் உயிரிழந்தது.

சென்னை:

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்து 300 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இந்த பூங்காவை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர்.

இந்த நிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 19 வயதான வெங்கட் என்ற ஆண் வரிக்கழுதைப்புலி, கடந்த 2 மாத காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது. பூங்கா கால்நடை டாக்டர்கள் அதற்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் நேற்று வரிக்கழுதைப்புலி பரிதாபமாக உயிரிழந்து. இறந்த வரிக்கழுதைப்புலியின் உடலை பூங்கா டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்த பிறகு பூங்கா வளாகத்தில் உள்ள நவீன எரியூட்டு மையத்தில் தகனம் செய்தனர்.

உடல் நலக்குறைவால் வரிக்கழுதைப்புலி உயிரிழந்ததை தொடர்ந்து பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு எந்த விதமான நோய் தொற்றுகளும் ஏற்படாதவாறு பூங்கா டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சிங்கங்கள் உயிரிழந்தது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் பூங்காவில் தொடர்ந்து சிங்கம், புலி, சிறுத்தை, வரிக்குதிரை, சாம்பார் மான், காட்டுமாடு, காட்டுப்பன்றி உள்பட பல்வேறு விலங்குகள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News