தமிழ்நாடு செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்

Published On 2022-09-22 14:06 IST   |   Update On 2022-09-22 14:06:00 IST
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம் வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது.
  • வாக்காளர்கள் தாமாகவே முன்வந்து படிவம் 6பி-யை பூர்த்தி செய்து முகாம் அலுவலர்களிடம் நேரில் சமர்ப்பிக்கலாம்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம் வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

வாக்காளர்கள் தாமாகவே முன்வந்து படிவம் 6பி-யை பூர்த்தி செய்து முகாம் அலுவலர்களிடம் நேரில் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News