தமிழ்நாடு

கருமுட்டை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி உட்பட 6 பேர் காப்பகத்தில் இருந்து தப்பி ஓட்டம்

Published On 2022-11-28 08:10 GMT   |   Update On 2022-11-28 08:10 GMT
  • சிறுமிகள் குறித்து கணக்கெடுக்கும்போது 6 சிறுமிகள் மாயமானது கண்டு காப்பக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
  • 3 சிறுமிகள் பெருமாள் மலை பகுதியில் இருந்தபோது போலீசார் மீட்டனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஆர்.என். புதூரில் அரசு காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ஈரோடு கருமுட்டை எடுத்த வழக்கு சிறுமியும் இந்த காப்பகத்தில் உள்ளார்.

இங்கு தங்கி இருக்க விரும்பாத சிறுமிகள் மற்றும் கருமுட்டை வழக்கு சிறுமி உட்பட 6 பேர் காப்பக நிர்வாகி கவனிக்காத சமயத்தில் நேற்று மாலை காப்பகத்தில் இருந்து தப்பி வெளியேறினர். நேற்று மாலை காப்பகத்தில் சிறுமிகள் குறித்து கணக்கெடுக்கும்போது 6 சிறுமிகள் மாயமானது கண்டு காப்பக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து காப்பக நிர்வாகி சித்தோடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் 3 சிறுமிகள் பெருமாள் மலை பகுதியில் இருந்தபோது போலீசார் மீட்டனர். மற்ற மூன்று சிறுமிகள் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வைத்து போலீசார் மீட்டனர். பின்னர் அந்த 6 சிறுமிகளுக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. காப்பகத்தில் இருக்க பிடிக்காமல் அந்த சிறுமிகள் வெளியேறியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

Similar News