தமிழ்நாடு

கவர்னர் மாளிகை முற்றுகை: வேல்முருகன் கட்சியினர் 870 பேர் மீது வழக்கு

Published On 2023-10-01 10:47 GMT   |   Update On 2023-10-01 10:47 GMT
  • போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
  • மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் அக்கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வேல்முருகனை கைது செய்த போலீசார் அங்கிருந்த அனைவரையும் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 870 பேர் மீது கிண்டி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News