தமிழ்நாடு செய்திகள்

நீங்கள் ஏன் பா.ஜ.கவில் இணையக்கூடாது ? செந்தில் பாலாஜியிடம் கேட்ட அமலாக்கத்துறை- கபில் சிபில் குற்றச்சாட்டு

Published On 2023-09-15 16:29 IST   |   Update On 2023-09-15 17:04:00 IST
  • நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என்று அமலாக்கத்துறை கேட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு.
  • அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு.

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமின் கோரிய வழக்கு தொடர்பாக புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என்று விசாரணையின்போது அமலாக்கத்துறை கேட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதம் செய்தார்.

இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணையின் முடிவில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும்14 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் 29ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 6வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News