தமிழ்நாடு

3 ஆயிரம் பக்க ஆவணங்களை கொடுங்க.. செந்தில் பாலாஜி மனு மீது நீதிபதி அதிரடி உத்தரவு..!

Published On 2023-08-14 15:39 GMT   |   Update On 2023-08-14 15:39 GMT
  • அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.
  • ஆவணங்கள், முழு விவரங்களை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல்.

ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை முதல் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். ஐந்து நாட்கள் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது குற்றபத்திரிகையை அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்தனர். சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை டிரங்க் பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் சமர்பித்தனர்.

 

இந்த நிலையில் குற்றப்பத்திரிகை உள்பட வழக்கு ஆவணங்கள், மற்றும் இதர விவரங்கள் அனைத்தையும் வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விரைவாக விசாரிக்கவும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அந்த வகையில், குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை கேட்ட மனுவை வலியுறுத்தவில்லை என்றும் காலையில் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் படி வலியுறுத்தவில்லை என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. மனுவை வலியுறுத்தாததால் அதனை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News