தமிழ்நாடு செய்திகள்

2 நாட்கள் சுற்றுப்பயணம்: ஈரோடு-திருப்பூர் மாவட்டங்களில் சசிகலா தொண்டர்களை சந்திக்கிறார்

Published On 2023-07-14 09:46 IST   |   Update On 2023-07-14 09:46:00 IST
  • சசிகலா கோவை வழியாக ஈரோடு புறநகர் மாவட்டத்தில் உள்ள பவானி அந்தியூர் பிரிவை சென்றடைகிறார்.
  • சசிகலா திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலகம் அருகில் மற்றும் அவிநாசி புதிய பஸ் நிலையம் அருகிலும் தொண்டர்களை சந்திக்கிறார்.

சென்னை:

தமிழகம் முழுவதும் சசிகலா சுற்றுப்பயணம் செய்து தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் ஈரோடு புறநகர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அவர் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாளை (15-ந்தேதி) காலை 11 மணிக்கு தியாகராயநகர் இல்லத்திலிருந்து புறப்படும் சசிகலா, கோவை வழியாக ஈரோடு புறநகர் மாவட்டத்தில் உள்ள பவானி அந்தியூர் பிரிவை சென்றடைகிறார். மாலை 4 மணியளவில் அங்கிருந்து தனது புரட்சிப் பயணத்தை தொடங்கும் அவர் கவுந்தம்பாடி நான்கு ரோடு, கோபி செட்டிபாளையம் எம்.ஜி.ஆர். திடல் மற்றும் கணக்கம்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார்.

மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு திருப்பூர் மாவட்டம் வளர்மதி பஸ் நிலையத்தில் இருந்து பயணத்தை தொடங்கும் சசிகலா திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலகம் அருகில் மற்றும் அவிநாசி புதிய பஸ் நிலையம் அருகிலும் தொண்டர்களை சந்திக்கிறார்.

இதில் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News