தமிழ்நாடு செய்திகள்
சனாதனத்தை பா.ஜ.க. தூக்கி பிடிக்கும் ரகசியம் என்ன?: திராவிடர் கழகம் சார்பில் இன்று சிறப்பு கூட்டம்
- சனாதனத்தை பா.ஜ.க. தூக்கி பிடிக்கும் ரகசியம் என்ன? என்ற தலைப்பில் இன்று மாலை 6.30 மணிக்கு பெரியார் திடலில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.
- கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசுகிறார்.
சென்னை:
திராவிடர் கழகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
சனாதனத்தை பா.ஜனதா தூக்கி பிடிக்கும் ரகசியம் என்ன? என்ற தலைப்பில் இன்று மாலை 6.30 மணிக்கு பெரியார் திடலில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசுகிறார்.
திராவிடர் கழக பொருளாளர் குமரேசன், துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன், வக்கீல்கள் அருள்மொழி, தளபதி பாண்டியன் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.