தமிழ்நாடு செய்திகள்

மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. இரா.அருள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பா.ம.க. எம்.எல்.ஏ. திடீர் தர்ணா போராட்டம்

Published On 2023-07-22 13:01 IST   |   Update On 2023-07-22 13:01:00 IST
  • சேலம் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் அமைக்கப்படும் சாலைகள் தரம் இல்லாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
  • இங்குள்ள அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள்.

சேலம்:

சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக அனுராதா என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் மனு கொடுக்க சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. இரா.அருள் நேரம் கேட்டிருந்தார்.

அதன்படி இன்று காலை அருள் எம்.எல்.ஏ. சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் அங்கு வட்டார வளர்ச்சி அதிகாரி அனுராதா ஆய்வுக்கு சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தன்னை புறக்கணித்ததாக கூறி அருள் எம்.எல்.ஏ. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நிர்வாகிகளுடன் திடீரென தர்ணா போராட்டம் செய்தார்.

இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அவரிடம் சமரச பேச்சுவாரத்தை நடத்தினர்.

சேலம் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் அமைக்கப்படும் சாலைகள் தரம் இல்லாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர். திட்டப்பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் கேட்டால் எந்த பதிலும் முறையாக தருவதில்லை. மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. நான். எனக்கு கவுன்சில் கூட்டத்துக்கு தகவல் அனுப்புவது இல்லை. ஆனால் முதல்-அமைச்சர், அமைச்சர்களிடம் எங்கள் குறைகளை நேரம் ஒதுக்கி கேட்டு நிவர்த்தி செய்து வருகிறோம். ஆனால் இங்குள்ள அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News