தமிழ்நாடு

துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த கீதாவையும், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தையும் காணலாம்.

திருச்சி பெண் விமான பயணியிடம் ரூ.28 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

Published On 2023-11-10 07:45 GMT   |   Update On 2023-11-10 07:45 GMT
  • கீதா அணிந்திருந்த உடையில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
  • தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து பெண் பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை:

மதுரையில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து மதுரை வரும் பயணிகள் வரி ஏய்ப்புக்காக தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துபாயில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த பயணிகளிடமும், அவர்களின் உடமைகளிலும் சுங்கா இலாகாவினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது திருச்சி, பாலக்கரை பகுதியைச் சேர்ந்த மணிவேல் மனைவி கீதா (வயது 42) என்பவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சல்லடை போட்டு சோதித்தனர். இதில் கீதா அணிந்திருந்த உடையில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் ரூ.27 லட்சத்து 86 ஆயிரத்து 930 மதிப்பில் 458 கிராம் எடையுள்ள தங்கம் என தெரிய வந்தது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து அந்த பெண் பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News