தமிழ்நாடு செய்திகள்

மழை பாதிப்பு: கூடுதல் அமைச்சர்கள் நியமனம்

Published On 2023-12-18 14:40 IST   |   Update On 2023-12-18 15:11:00 IST
  • 4 மாவட்ட மீட்புப் பணிகளுக்காக கண்காணிப்பு அதிகாரிகளாக நேற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.
  • மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த இன்று கூடுதலாக 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை:

தென்மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

4 மாவட்ட மீட்புப் பணிகளுக்காக கண்காணிப்பு அதிகாரிகளாக நேற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.

கன்னியாகுமரி-நாகராஜன், நெல்லை-செல்வராஜ், தூத்துக்குடி-ஜோதி நிர்மலா, தென்காசி-சுன்சோங்கம் ஜதக் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

களத்தில் ஏற்கனவே அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், கே.கே.எஸ்.எஸ்.ஆர் உள்ளனர்.

இந்நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த இன்று கூடுதலாக 4 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், ராஜ கண்ணப்பன், மூர்த்தி ஆகியோரை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News