தமிழ்நாடு செய்திகள்

அக்காள்-தம்பி மீது போலீசார் வழக்குப்பதிவு: சமூக வலைதளத்தில் சிறுமி வேறொருவருடன் பழகியதால் அதிர்ச்சி

Published On 2023-08-25 12:44 IST   |   Update On 2023-08-25 12:44:00 IST
  • இன்ஸ்டாகிராம் காதலன் சிறுமியை மீண்டும் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டதாக தெரிகிறது.
  • எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போரூர்:

ராமாபுரம், பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் உறவுக்காரரான பாண்டியன் என்பவருக்கும் (சிறுமியின் தாயின் தம்பி) கடந்த மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் சிறுமிக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து குழந்தைகள் உதவி மையத்தை தொடர்பு கொண்ட சிறுமி தன்னை கட்டாயபடுத்தி உறவுக்காரருடன் திருமணம் செய்து வைத்து விட்டதாக புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து குழந்தைகள் நல உதவி மைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக சிறுமியின் தாய் மற்றும் அவரது தம்பியான பாண்டியன் மீது வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக போலீசார் விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. இதில் சிறுமி ஏற்கனவே சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலனை தேடி சத்தியமங்கலத்துக்கு சென்ற சிறுமியை அவரது தாய் மீட்டு வந்துள்ளார் இதற்கிடையில் சிறுமி தனது தாயின் சகோதரரான பாண்டி யனை காதலிப்பதாகவும், அவருடன் திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் வேறு வழியின்றி மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் காதலன் சிறுமியை மீண்டும் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொண்டதாக தெரிகிறது. இதனை அறிந்த சிறுமியின் கணவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகாராறு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அந்த சிறுமி குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொண்டு தனது திருமணம் குறித்து புகார் அளித்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக அவரது தாய் மற்றும் திருமணம் செய்த பாண்டியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த விவகாரத்தில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போலீசார் மேலும் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News