தமிழ்நாடு செய்திகள்

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

Published On 2022-10-13 19:44 IST   |   Update On 2022-10-13 19:44:00 IST
  • பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
  • தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகல்கள் வழங்கப்பட்டன.

கோவை;

கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகம் மீது கடந்த மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக சதாம் உசேன், அகமது சிகாபுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான நகல்களை, இருவரிடமும் சிறையில் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News