தமிழ்நாடு செய்திகள்
ஈரோட்டில் ஒட்டப்பட்டுள்ள பரபரப்பு சுவரொட்டிகள்.

ஓட்டுக்கு பணம் நாட்டுக்கு அழிவு- பெரியார் மண் விற்பனைக்கு அல்ல: ஈரோட்டில் பரபரப்பு சுவரொட்டிகள்

Published On 2023-02-01 09:48 IST   |   Update On 2023-02-01 09:48:00 IST
  • தேர்தல் பணியாற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் ஈரோடு தொகுதியில் குவிந்து உள்ளனர்.
  • நேற்று முதல் நாளில் ஏராளமான சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய வந்திருந்தனர்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பணியாற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் ஈரோடு தொகுதியில் குவிந்து உள்ளனர்.

காலை மற்றும் மாலை நேரங்களில் அவர்கள் தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்கள்.

தேர்தல் பிரசாரத்துக்கு வெளியூர் ஆட்கள் அதிகளவில் வந்து இருப்பதால் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று முதல் நாளில் ஏராளமான சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய வந்திருந்தனர்.

அவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், ஓட்டுக்கு பணம் வாங்குவதும் தவறு என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் மறுமலர்ச்சி மக்கள்இயக்கம் என்றபெயரில் பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ஓட்டுக்கு பணம் நாட்டுக்கு அழிவு, பெரியார் மண் விற்பனைக்கல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News