மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி- வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. வழங்கினார்
- பொதுக்கூட்டம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தெற்கு ஒன்றிய செயலாளர் ஆம்பூர் சந்தானம் தலைமையில் நடைபெற்றது.
- 500-பேருக்கு சில்வர் குடம் மற்றும் பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு:
காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு. க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தெற்கு ஒன்றிய செயலாளர் ஆம்பூர் சந்தானம் தலைமையில் நடைபெற்றது. தலைமை கழக பேச்சாளர்கள் சேலம் சுஜாதா, ஆரணி மாலா ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிறப்பு அழைப்பாளராக வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு 500-பேருக்கு சில்வர் குடம் மற்றும் பெண்களுக்கு சேலைகளை வழங்கினார்.
மாவட்ட பிரிதிநிதி சி.எம்.கதிரவன், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி கே.ப.ராஜன், ஒன்றிய துணை செயலாளர் அருள் தேவி, கெளதமன், கருணாகரன், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் கலைவாணி முனிராசு, ஒன்றிய அவை தலைவர் வி.ஜி.திருமலை, மாவட்ட பிரதிநிதிகள் ராஜேந்திரன், ஜெயக்குமார், ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகிகள் கே.ஆர்.சி.ஜெ.ரத்தீஷ், ஏ.சத்யா, அறிவழகன், பிரவீன், ஒன்றிய மாணவர் அணி ராஜராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆப்பூர் குமாரசாமி, டில்லி, பாலாஜி, விஜயலட்சுமி துரைபாபு, நிர்மலா அசோகன், கவுன்சிலர்கள் நிந்துமதி திருமலை, மோகனா ஜீவானந்தம், தரணி கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்தீஷ் நன்றி கூறினார்.