தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை- கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பு ஒத்திகை

Published On 2022-10-28 08:33 GMT   |   Update On 2022-10-28 08:33 GMT
  • கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள அரங்கம் மற்றும் அணுசக்தி மைதானத்தில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்டு படையினர் ஒத்திகை பயிற்சி அளித்தனர்.
  • கால்நடைகளை அப்புறப்படுத்துவது, மருத்துவ குழுவின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டது.

மாமல்லபுரம்:

நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு நேற்றும், இன்றும் கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள அரங்கம் மற்றும் அணுசக்தி மைதானத்தில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்டு படையினர் ஒத்திகை பயிற்சி அளித்தனர்.

இப்பயிற்சியில் கனமழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மக்களை உடனடியாக மீட்பது, கடலில் பூகம்பம் ஏற்பட்டு சுனாமி வந்தால் மீனவர்களை எப்படி காப்பாற்றுவது, கால்நடைகளை அப்புறப்படுத்துவது, மருத்துவ குழுவின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டது.

இதற்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் நவீன கருவிகள், மீட்பு சாதனங்கள், பாதுகாப்பு உடைகள், தொலைதொடர்பு ராடர்கள் போன்றவைகளை கொண்டு வந்திருந்தனர்.

Tags:    

Similar News