தமிழ்நாடு

கோவை ஆலாந்துறையில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெறும் ரஞ்சித்குமார் வீடு - சென்னை ஐகோர்ட்

என்.ஐ.ஏ. சோதனை: நாம் தமிழர் கட்சி ஐகோர்ட்டில் முறையீடு

Published On 2024-02-02 05:53 GMT   |   Update On 2024-02-02 08:06 GMT
  • நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • முறையீட்டை ஏற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுவை பிற்பகலில் விசாரிப்பதாக கூறி அனுமதி அளித்துள்ளார்.

சென்னை:

தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், நிதி திரட்டி பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், என்.ஐ.ஏ. சோதனையிடுவதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் வக்கீல்கள் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு முன்பு முறையீடு செய்தனர்.

என்.ஐ.ஏ. சோதனை தொடர்பாக வழக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் முறையிட்டனர். இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுவை பிற்பகலில் விசாரிப்பதாக கூறி அனுமதி அளித்துள்ளார்.

Tags:    

Similar News