தமிழ்நாடு

மத்திய ரெயில்வே மந்திரியிடம் எம்.பி. விஜய் வசந்த் மனு

குமரி மாவட்ட மக்களின் நீண்ட நெடுநாள் கோரிக்கை- மத்திய ரெயில்வே மந்திரியிடம் எம்.பி. விஜய் வசந்த் மனு

Published On 2022-08-01 10:50 GMT   |   Update On 2022-08-01 10:50 GMT
  • ஐதராபாத் - சென்னை ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்.
  • லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த ரெயில் நிலையமாக மாற்ற வேண்டும்.

கன்னியாகுமரி:

மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது குமரி மாவட்ட மக்களின் நெடுநாள் தேவைகளை கோரிக்கையாக அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு தினசரி ரெயில், சென்னை தாம்பரம் விரைவு ரெயிலை தினசரி ரெயில் சேவையாக மாற்றுவது, ஐதராபாத் - சென்னை ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பது என புது ரெயில்களின் தேவையை எடுத்துரைத்தார்.

ரெயில் நிலையங்களின் கட்டுமான மேம்பாடு குறித்தும் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார். குறிப்பாக லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்த ரெயில் நிலையமாக மாற்ற வேண்டும்.

மேலும் குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரெயில்வே பணிகளை துரிதமாக முடிப்பதற்கு அரசாங்கம் தரப்பில் ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News