தமிழ்நாடு செய்திகள்
மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் நண்பர்கள் 2 பேர் பலி
- நண்பர்கள் இருவரும் சென்னையில் இருந்து நந்தியம்பாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
- நண்பர்கள் இருவரும் விபத்தில் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் தீபக் (வயது 25), வினோத் (24). நண்பர்களான இருவரும் சென்னையில் இருந்து நந்தியம்பாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
மீஞ்சூர் அருகே உள்ள கொண்டக்கரை பகுதியில் வந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளோடு இருவரும் தவறி கீழே விழுந்தனர்.
இதில் பலத்த காயம் அடைந்த தீபக் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த வினோத் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வினோத்தும் இறந்தார்.
நண்பர்கள் இருவரும் விபத்தில் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.