தமிழ்நாடு

பரங்கி மலையில் நடமாடும் நியாய விலை உணவகம்- அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்

Published On 2022-11-02 09:59 GMT   |   Update On 2022-11-02 09:59 GMT
  • அமைச்சர் தா.மோ. அன்பரசன் நடமாடும் உணவு வாகனத்தையும், மரச்செக்கு எண்ணெய், குறைந்த விலை குடிநீர் ஆகியவற்றையும் அறிமுகம் செய்து வைத்தார்.
  • விழாவில் பல்லாவரம் இ. கருணாநிதி எம்.எல்.ஏ., மண்டல குழு தலைவர் சந்திரன், முன்னாள் கவுன்சிலர் குணாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை:

தமிழ்நாடு அரசு தொழில் வணிகத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழ்நாடு கேட்டரிங் மற்றும் கேண்டின் சேவை தொழிற் கூட்டுறவு சங்கம் சார்பில் கலைஞர் நடமாடும் நியாய விலை உணவகம், மரச்செக்கு எண்ணெய், சிறுதானிய உணவு வகைகள், குறைந்து விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவை அறிமுக விழா சென்னை பரங்கி மலையில் நடந்தது. விழாவுக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கா. சு. வீரமணி தலைமை தாங்கினார். விக்னேஷ் பாசிமர்ஸ், சிவகுமார், சுஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு நடமாடும் உணவு வாகனத்தையும், பொதுமக்களுக்கு விற்பனை செய்ய உள்ள சிறு தானிய உணவு வகைகள், மரச்செக்கு எண்ணெய், குறைந்த விலை குடிநீர் ஆகியவற்றையும் அறிமுகம் செய்து வைத்தார்.

விழாவில் பல்லாவரம் இ. கருணாநிதி எம்.எல்.ஏ., மண்டல குழு தலைவர் சந்திரன், முன்னாள் கவுன்சிலர் குணாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுப்பையா நன்றி கூறினார்.

Tags:    

Similar News