தமிழ்நாடு

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

Published On 2023-02-09 05:55 GMT   |   Update On 2023-02-09 05:55 GMT
  • சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தரிசனம் செய்தார்.
  • சங்கரன்கோவில் நாகசுனை தெப்பம், தங்கத்தேர், ஆவுடைபொய்கை தெப்பம் உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

சங்கரன்கோவில்:

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தரிசனம் செய்தார்.

தற்போது கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தொடங்கியுள்ளதால், அந்த பணிகளையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

சங்கரன்கோவில் நாகசுனை தெப்பம், தங்கத்தேர், ஆவுடைபொய்கை தெப்பம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் தங்கத்தேருக்கு முலாம் பூச உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், கும்பாபிஷேக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், நாளை நடைபெற உள்ள தெப்பத்திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் சங்கரன்கோவில் ராஜா, வாசுதேவநல்லூர் சதன்திருமலைகுமார், நெல்லை அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, மண்டல இணை ஆணையர் அன்புமணி, சுசீந்திரம் துணை ஆணையர் ஞானசேகரன், சங்கரன்கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி மற்றும் கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News