மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6,943 கனஅடி தண்ணீர் வருகிறது
- கர்நாடக அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.
- இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.91 அடியாக இருந்தது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதோடு கர்நாடக அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.91 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6ஆயிரத்து 943 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 6ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் தற்போது 11.03 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் உள்ளது. இதில் மீன்வளம் மற்றும் குடிநீர் தேவைக்கு 6 டி.எம்.சி. தண்ணீர் நிறுத்தி வைக்கப்படும். எனவே மீதி உள்ள 5.03 டி.எம்.சி. தண்ணீரே பாசனத்திற்கு திறக்கப்படும் சூழ்நிலை உள்ளது.