தமிழ்நாடு

மதிமுக தலைமையகம்

கட்சியை தி.மு.க.வுடன் இணைத்துவிடுங்கள்.. வைகோவுக்கு அவைத்தலைவர் எழுதிய கடிதம்.. மதிமுகவில் சலசலப்பு!

Published On 2023-04-29 03:32 GMT   |   Update On 2023-04-29 03:39 GMT
  • மதிமுக தொடங்கப்பட்டபோது வைகோ வாரிசு அரசியலுக்கு எதிராக உணர்ச்சிமிகு உரைகளை பேசினார்.
  • முன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியை விட்டு படிப்படியாக திமுகவுக்கே சென்றுவிட்டனர்.

சென்னை:

மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, கட்சியின் பொதுச்செயளலார் வைகோவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் மதிமுகவின் தற்போதைய செயல்பாடுகள் வருத்தம் அளிப்பதாக கூறி உள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

மதிமுக தொடங்கப்பட்டபோது வைகோ வாரிசு அரசியலுக்கு எதிராக உணர்ச்சிமிகு உரையாற்றினார். அவரது பேச்சைக் கேட்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர். ஆனால் வைகோவின் சமீபகால குழப்பமான அரசியல் நிலைப்பாடு காரணமாக முன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியை விட்டு படிப்படியாக திமுகவுக்கே சென்றுவிட்டனர்.

மகனை ஆதரிப்பதும் அரவணைப்பதும், சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது. இதனை வைகோ இன்னும் உணராமல் இருப்பது வேதனை அளிக்கிறது. 30 ஆண்டுகளாக வைகோவின் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள், மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க, மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைத்துவிடுவது நல்லது.

இவ்வாறு திருப்பூர் துரைசாமி கூறி உள்ளார்.

அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமியின் இந்த கடிதம் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News