தமிழ்நாடு

கான்வாயில் தொங்கிச் செல்லும் மேயர் பிரியா

முதலமைச்சர் கான்வாயில் தொங்கியபடி சென்ற சென்னை மேயர் பிரியா, நகராட்சி ஆணையர்

Published On 2022-12-10 15:37 GMT   |   Update On 2022-12-10 15:37 GMT
  • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புயல், மழை பாதிப்புகள் குறித்து இன்று ஆய்வு செய்தார்.
  • புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புயல், மழை பாதிப்புகள் குறித்து இன்று ஆய்வு செய்தார். அப்போது, முதல்வர் கான்வாயில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ஆகியோர் தொங்கியபடி சென்ற காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

தென்சென்னையில் புயல் பாதித்த இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் உள்ளிட்ட இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து, சென்னை காசிமேட்டில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதமடைந்த படகுகளைப் பார்வையிட்டு மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்நிலையில், அங்கு செல்லும்போது சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முதல்வர் கான்வாயில் தொங்கியபடி சென்றனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News