தமிழ்நாடு

மணலி புதுநகரில் 2 கி.மீ. தூரத்துக்கு கொசஸ்தலை ஆற்றின் கரைகள் உடைந்து சேதம்

Published On 2024-02-19 08:25 GMT   |   Update On 2024-02-19 08:25 GMT
  • சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆற்றை சீரமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • சமூக ஆர்வலர்களும் கொசஸ்தலை ஆற்றை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை மணலி புதுநகரில் கொசஸ்தலை ஆறு உள்ளது. மழைக்காலங்களில் பூண்டி ஏரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரக்கூடிய மழைநீர் மற்றும் உபரிநீர் இந்த ஆறு வழியாக வந்து மணலி புதுநகரை கடந்து எண்ணூர் முகத்துவாரத்தில் கடலில் கலக்கிறது.

இந்நிலையில் புது நாப்பாளையத்தில் இருந்து இடையஞ்சாவடி வரை சுமார் 2 கி.மீ தூரத்திற்கு கொசஸ்தலை அற்றின் இருபுறமும் ஆங்காங்கே கரைகள் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பெருமழை பெய்யும் பட்சத்தில் ஆற்றுநீர் உடைந்த கரையின் வழியாக வெளியேறி மணலி புதுநகர் பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து பெரும் சேதத்தை விளைவிக்கும் அபாயம் உள்ளது.

கொசஸ்தலை ஆற்றின் கரையை இருபுறமும் உயர்த்தி சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ஏற்கெனவே அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், சமூக ஆர்வலர்களும் கொசஸ்தலை ஆற்றை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனாலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆற்றை சீரமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே பெருமழை பெய்வதற்கு முன்பு கொசஸ்தலை ஆற்றின் கரையை சீரமைக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் கோரிக்கை ஆகும். இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கூறியதாவது:-

கடந்த காலங்களில் பெருமழை பெய்யும் போது உபரி நீர் மணலி புதுநகர் பகுதியில் குடியிருப்புகளில் புகுந்ததால் மிகப்பெரிய பாதிப்பும், பொதுமக்களுக்கு பொருள் இழப்பும் ஏற்பட்டது. இந்த பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்டெடுக்க அரசு மிகவும் சிரமப்பட வேண்டிய திருந்தது. எனவே தற்போது சேதமடைந்துள்ள கொசஸ்த லை ஆற்றின் கரையை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மழை பெய்யும் நேரங்களில் இந்த பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து பொது மக்கள் மீண்டும் இழப்புகளை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News