தமிழ்நாடு

இந்து தற்கொலை செய்து கொள்ள ஆன்லைன் மூலம் வாங்கிய ஹீலியம் சிலிண்டர்.

தற்கொலை செய்ய திட்டமிட்டு ஆன்லைன் மூலம் ஹீலியம் சிலிண்டரை வாங்கிய ஐ.டி. பெண் ஊழியர்

Published On 2022-09-19 03:56 GMT   |   Update On 2022-09-19 03:56 GMT
  • திருமணமான 100 நாட்களில் ஐ.டி. பெண் ஊழியர் கொடூரமான முறையில் தற்கொலை செய்ய காரணம் என்ன என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
  • சிலிண்டரை இந்துவின் தந்தை திருவேங்கடசாமி டெலிவரி எடுத்துள்ளார்.

கோபி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பொலவகாளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இந்து (25). இவருக்கும் நல்லகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த விஷ்ணுசாரதிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கணவன்-மனைவி 2 பேரும் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் இந்துவின் பாட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை சந்திக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து தனது கணவர் விஷ்ணுசாரதியுடன் பொலவகாளிபாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வீட்டில் சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு தூங்க சென்ற இந்து இரவு 7.30 மணி ஆகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. உறவினர்கள் அவரை எழுப்பியபோது உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. மேலும் அறையின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.

இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது முகத்தை பிளாஸ்டிக் கவரால் சுற்றி டேப் ஒட்டப்பட்டு பலூனுக்கு அடிக்கும் ஹீலியம் சிலிண்டரில் இருந்து டியூப் மூலம் வாயில் காற்றை செலுத்தி மூச்சு திணறி தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. சியாமளாதேவி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்து தற்கொலை குறித்து கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினியும் விசாரணை நடத்தினார்.

திருமணமான 100 நாட்களில் ஐ.டி. பெண் ஊழியர் கொடூரமான முறையில் தற்கொலை செய்ய காரணம் என்ன என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் பலூனுக்கு அடிக்கும் ஹீலியம் சிலிண்டர் குறித்தும் விசாரணை நடத்தினர்.

அப்போது இந்து சென்னையில் இருக்கும்போதே தற்கொலை செய்ய திட்டமிட்டு பலூனுக்கு அடிக்கும் ஹீலியம் சிலிண்டரை ஆன்லைன் மூலம் வாங்கி பொலவகாளிபாளையத் தில் உள்ள தனது தந்தை வீட்டு முகவரிக்கு அனுப்பி உள்ளார்.

சிலிண்டரை இந்துவின் தந்தை திருவேங்கடசாமி டெலிவரி எடுத்துள்ளார். ஹீலியம் சிலிண்டரை பெற்றுக்கொண்ட அவர் தனது மகளிடம் தொடர்பு கொண்டு இந்த சிலிண்டர் எதற்கு என்று கேட்டுள்ளார். அதற்கு இந்து பலூன் அடிக்க தேவைப்படுகிறது என்று பதில் அளித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News