தமிழ்நாடு

ராக்கெட்டுகளை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க புதிய உலோகம்- இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Published On 2024-04-18 04:03 GMT   |   Update On 2024-04-18 04:03 GMT
  • ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைகோள்கள் உள்ளிட்ட கருவிகளின் திறனை அதிகரிக்கிறது.
  • ராக்கெட் என்ஜின் தொழில்நுட்பத்திற்கு ஒரு திருப்புமுனையாகும்.

சென்னை:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கீழ், திருவனந்தபுரத்தில் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய (வி.எஸ்.எஸ்.சி.), விஞ்ஞானிகள் ராக்கெட் என்ஜின்களுக்கான இலகுரக கார்பன்- கார்பன் (சி-சி) என்ற அதிநவீன உலோகத்தை கண்டு பிடித்து உள்ளனர். இது கலவைகள் போன்ற மேம்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டு உள்ளது.

இது குறைந்த எடையை கொண்டதுடன், அதிக வெப்பத்தை தாங்கும் சக்தி படைத்தது. அத்துடன் ராக்கெட்டின் செயல் திறனை மேம்படுத்தும். இதனால் ராக்கெட்டின் எடை குறைவதால் அதிக எடை கொண்ட செயற்கைகோள்கள் மற்றும் கருவிகளை ராக்கெட்டில் பொருத்தி வெற்றிகரமாக விண்ணில் ஏவ முடியும்.

அத்துடன், ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைகோள்கள் உள்ளிட்ட கருவிகளின் திறனை அதிகரிக்கிறது. அதிக வெப்பநிலையிலும் எந்திரங்களை பாதுகாக்கிறது. இவை ராக்கெட் என்ஜின் தொழில்நுட்பத்திற்கு ஒரு திருப்புமுனையாகும்.

இது ராக்கெட் என்ஜின்களின் மதிப்பை மேம்படுத்துவதுடன், உந்துதல் நிலைகளையும் அதிகரிக்கிறது' என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Tags:    

Similar News