தமிழ்நாடு

கரூர் துணை மேயர் வீட்டிற்கு சீல் வைத்த வருமான வரித்துறை அதிகாரிகள்

Published On 2023-05-26 20:34 GMT   |   Update On 2023-05-26 20:34 GMT
  • துணை மேயர் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு ஆதரவார்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
  • அதிகாரிகள் வாகனம் செல்ல முடியாதபடி, மாட்டுவண்டியை குறுக்கே நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ் நாடு மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதேபோல், கரூர் மாநகராட்சியின் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால் அவர்களை அனுமதிக்கவில்லை.

இதையடுத்து, அதிகாரிகள் நேற்று இரவு மீண்டும் துணை மேயர் வீட்டிற்கு சோதனை நடத்த சென்றனர். ஆனால், வீட்டில் யாரும் இல்லாததை அடுத்து கரூர் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு வருமான வரித்துறையினர் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர்.

துணை மேயர் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு ஆதரவார்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் வாகனம் செல்ல முடியாதபடி, மாட்டுவண்டியை குறுக்கே நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News