தமிழ்நாடு

மக்களுக்கு வருவாய் அதிகரிப்பதால் விலைவாசி உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது- அமைச்சர் செஞ்சி மஸ்தான்

Published On 2023-07-09 02:44 GMT   |   Update On 2023-07-09 03:00 GMT
  • ஏழைகள் மத்தியில் பணப்புழக்கத்தை கொண்டு வந்துவிட்டதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
  • தக்காளி என்பது சீசன் உணவுப்பொருள். ஏற்ற இறக்கம் எல்லாம் 10 நாட்கள்தான் இருக்கும் தகவல்.

தக்காளி, இஞ்சி, மிளகாய் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துவரும் நிலையில், விலைவாசி உயர்வு மக்களை பெரிதாக பாதிக்காது என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

இப்போது வருவாய் என்பது பெரிய விஷயமே இல்லை. சாதாரண கூலித்தொழிலாளி தினம் 1000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார். மக்கள் மத்தியில், ஏழைகள் மத்தியில் பணப்புழக்கத்தை கொண்டு வந்துவிட்டோம். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கிறது. வேலை வாய்ப்புகள் தாராளமாக உள்ளன.

இப்போது விலைவாசி ஏறும் சமயத்தில் மக்கள் பெரிய அளவில் சிரமப்படவில்லை. அதற்கு ஏற்ற வருவாய் கூடுதலாக கிடைக்கிறது. வருவாய் கூடுதலாக வருவதால் ஓரளவு சரிசெய்ய முடிகிறது.

தக்காளி என்பது சீசன் உணவுப்பொருள். ஏற்ற இறக்கம் எல்லாம் 10 நாட்கள்தான் இருக்கும். அதைக்கூட கட்டுப்படுத்தத்தான் ரேசன் கடைகளில் தக்காளியை விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News