தமிழ்நாடு செய்திகள்
சிற்பிகள் நலச்சங்கம் துவக்கம்- மத்திய ஜவுளித்துறை தென்மண்டல இயக்குநர் பங்கேற்பு
- 200 க்கும் மேற்பட்ட சிற்பிகள் ஒன்றிணைந்து முதல்முறையாக "பல்லவா சிற்பிகள் நலச்சங்கம்" என்ற பெயரில் புதிய சங்கத்தை துவங்கியுள்ளனர்.
- மத்திய ஜவுளித்துறை தென் மண்டல இயக்குநர் பிரபாகரன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பகுதியில் 500 க்கும் மேற்பட்ட சிற்பக்கூடங்கள், ஸ்தபதி, சிற்பிகள் என 2000 க்கும் மேற்பட்ட சிற்பக் கலைஞர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாமல்லபுரத்தில் நலச்சங்கம் இல்லாததால் நலவாரிய உதவிகள், மருத்துவ காப்பீடு, மானிய கடனுதவி, சட்ட ஆலோசனை, நலத்திட்ட உதவிகள் பெறுவதில் சிக்கல் இருந்து வந்தது.
இந்நிலையில் 200 க்கும் மேற்பட்ட சிற்பிகள் ஒன்றிணைந்து முதல்முறையாக "பல்லவா சிற்பிகள் நலச்சங்கம்" என்ற பெயரில் புதிய சங்கத்தை துவங்கியுள்ளனர். மத்திய ஜவுளித்துறை தென் மண்டல இயக்குநர் பிரபாகரன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி முதல்வர் இராஜேந்திரன், பெயர் பலகையை திறந்து வைத்தார். ஸ்தபதி அரவிந்தன், சண்முகம், ராமு, பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் விழாவில் பங்கேற்றனர்.